Arts, culture, entertainment and media
திருமணிமுத்தாற்றில்அரசு விடுதியில் உணவு சரியில்லை கலெக்டர் ஆபீஸில் மாணவியர் தர்ணா
கரூர்:கரூர், தான்தோன்றிமலை அருகே வெங்கக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும், அரசு சமூகநீதி விடுதியில்,
அருகே வெங்கக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும், அரசு சமூகநீதி
விடுதியில், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த,
100-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மாணவியருக்கு இட்லி மற்றும்
சட்னி வழங்கப்பட்டுள்ளது. இதில், சட்னி தரமற்ற நிலையில்
உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அரசு
விடுதியில் இருந்து மாணவியர் ஊர்வலமாக, கரூர் கலெக்டர் அலுவலகம்
வந்தனர். அங்கு, நடவடிக்கை எடுக்கக்கோரி சாலையில் அமர்ந்து தர்ணா
போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மாவட்ட கலெக்டரின் நேர்முக
உதவியாளர் (பொ) முருகேசன் உள்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நடத்தினர். அப்போது, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக
உறுத்தி அளித்ததன் பேரில், மாணவியர் கலைந்து சென்றனர்.