Politics
கவுன்சிலர்களுக்கு வரவில்லை மதிப்பூதியம்
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆகஸ்ட் மாத மதிப்பூதியம் வழங்கப்படாததால் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
விருதுநகர் நகராட்சியில் தி.மு.க., கவுன்சிலர்கள் 20, காங். 8, அ.தி.மு.க., 3, மார்க்சிஸ்ட் 1, அ.ம.மு.க., 1, சுயேச்சை 3 என 36 கவுன்சிலர்கள் உள்ளனர்.
தமிழக அரசு மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ரூ.10 ஆயிரமும், நகராட்சி கவுன்சிலர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பூதியமும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என 2023 ஜூலையில் அறிவித்தது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாத மதிப்பூதியம் நேற்று(செப். 17) வரை வழங்கப்படவில்லை. ஒரு சில கவுன்சிலர்கள் இந்த மதிப்பூதியத்தை துாய்மை பணியாளர்கள் உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கவும், ஏரியாவில் ஏற்படும் இதர செலவுகளுக்கு பயன்படுத்துகின்றனர். வழக்கமாக நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போடும் போதே மதிப்பூதியமும் வரவு வைக்கப்படும். ஆனால் தற்போது வரை வரவு வைக்கப்படாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் தி.மு.க., காங். கவுன்சிலர்கள் மதிப்பூதியம் கிடைக்காததற்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக மதிப்பூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.