கிரேன் கயிறு அறுந்து தொழிலாளி பலி
ஸ்ரீபெரும்புதுார், செப். 7– ஸ்ரீபெரும்புதுார் அருகே, தனியார் தொழிற்சாலையில், கிரேன் கயிறு அறுந்து
ஸ்ரீபெரும்புதுார் அருகே, தனியார் தொழிற்சாலையில், கிரேன் கயிறு அறுந்து விழுந்ததில் 21 வயது வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
அசாம் மாநிலம், திருபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண், 21, ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கத்தில் தங்கி, அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, கிரேன் மூலம் 200 கிலோ எடையுள்ள இரும்பு குழாய் தொழிற்சாலை கட்டுமான பணிக்காக வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக, கிரேன் கயிறு அருந்து விழுந்தது. இதில், கீழே இருந்த தருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.