டூவீலரிலிருந்து விழுந்த பள்ளி மாணவர் பலி
தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம், ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் அருண்பாண்டி 14.
ஆறுமுகப்பாண்டி தென்காசியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் இரு ஆண்டுகளாக ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த தாய்மாமா சுந்தரபாண்டியன் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருண்பாண்டி 10ம் வகுப்பு படித்தார். யாருக்கும் தெரியாமல் டூவீலரை ஓட்டிச் சென்ற நிலையில் பள்ளி அருகே தடுமாறி விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.