பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தெரு நாய் பிடிக்கும் பணி தீவிரம்

பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்-சியிலுள்ள, 15 வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் பொது-மக்களை விரட்டி கடிப்பதோடு, வாகன ஓட்டிக-ளையும் அச்சுறுத்தி வருகிறது.
நாய் துரத்தும்போது, சில வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்திலும் சிக்கி காயமடைந்து வரு-கின்றனர். இதனால், நாய்களை பிடிக்க, பொது-மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பேரூராட்சி துாய்மை பணியா-ளர்கள் செயல் அலுவலர் ஜீவானந்தம் உத்தரவின் படி, மேஸ்திரி வீரமணி தலைமையி-லான குழுவினர் மற்றும் தெரு நாய் பிடிப்பதற்கு, பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்-தினர் இணைந்து, தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.எம்., நகர் ரோடு, பாரஸ்ட் ரோடு, வினோ-பாஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முதல், தெரு நாய்களை வலை வைத்து பிடித்து வரு-கின்றனர். தொடர்ந்து, நாய்க்கடி தடுப்பூசி, கருத்-தடை அறுவை சிகிச்சை செய்து, 2 நாட்கள் பராம-ரித்து, அவற்றை பிடித்த இடத்திலேயே பாதுகாப்-பாக விடுவிக்க உள்ளனர்.