Arts, culture, entertainment and media
மூக்கையாத்தேவருக்கு அஞ்சலி
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் முன்னாள் பா.பி., தலைவர் மூக்கையாத்தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சர்வ கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர் .
அவரது குடும்பத்தினர், கள்ளர் கல்விக்கழக உறுப்பினர், சர்வ கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்பினர் அணி, அணியாக அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கல்லுாரி வளாகம், உசிலம்பட்டி முத்துராமலிங்கத்தேவர் சிலை வளாகத்தில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர்.
சோழவந்தானில் நினைவு தினம்: சோழவந்தான் 'பஸ் ஸ்டாண்ட்' அருகே மூக்கையாத்தேவர் சிலைக்கு தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் சத்யபிரகாஷ், சேர்மன் ஜெயராமன், நிர்வாகிகள் ஸ்ரீதர், ராஜாராமன் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் நகர் செயலாளர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் சேர்மன் முருகேசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கணேசன், மணிகண்டன், ராமச்சந்திரன், தியாகு, பிரேம் பங்கேற் றனர்.
