விஷம் குடித்த வாலிபர் பலி
ஆண்டிபட்டி, செப்.11- ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டியை சேர்ந்த ஓய்வு பி.டி.ஓ., பாரதமணி 61. இவரது இளைய மகன் ராகுல்
ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டியை சேர்ந்த ஓய்வு பி.டி.ஓ., பாரதமணி 61. இவரது இளைய மகன் ராகுல் 28, எம்.சி.ஏ., பட்டதாரி. இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். தனது வேலை பிடிக்காமல் சொந்த ஊரிலேயே ஏதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்றும் தொழில் தொடங்குவதற்கு தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஏதாவது அரசு வேலைக்கு செல், தொழில் செய்வதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தந்தை கூறியதால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தார். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். அங்கிருந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இறந்தார். ஆண்டிபட்டி போலீஸ் சாரி விசாரிக்கின்றனர்.