வெங்காயத்தை பாதுகாக்க ரூ.22 கோடியில் குடோன்
ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில், 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், இரண்டு துணை விற்பனை
மாவட்ட வேளாண் மற்றும் வணிகத்துறை சார்பில், 18 ஒழுங்கு முறை விற்பனை
கூடங்கள், இரண்டு துணை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன. இவற்றின்
கீழ், 74,000 டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்குகள்,
குளிர்பதன கிடங்குகள் உள்ளன. ஈரோடு, பெருந்துறை, கோபி,
சத்தியமங்கலம், பவானி, கொடுமுடி, அந்தியூர் என பல்வேறு
பகுதிகளில் உள்ளன.
நிலக்கடலை, தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்களை குறைந்த வாடகையில்
சேமித்து வைக்கலாம். விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்போது,
அவற்றை லாபகரமாக விற்பனை செய்யலாம். இருப்பு வைக்கப்படும் விளை
பொருட்கள் மீது பொருளீட்டு கடன் பெறும் வசதியும் உண்டு.
துறை மூலம் வெங்காயம் அழுகி, வீணாவதை தடுக்க, 22 கோடி ரூபாயில், 57,000
டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகளை அமைக்கும் திட்டத்தை
அறிவித்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 80 லட்சம் ரூபாய்
செலவில், 2,000 டன் கொள்ளளவு கொண்ட குறைந்த விலை வெங்காய சேமிப்பு
கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன.
பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர் ஆகிய பகுதிகளில் சின்ன
வெங்காயம் அதிகமாக சாகுபடியாவதால், அங்கு வெங்காய சேமிப்பு
கிடங்குகள் அமைய உள்ளது. வெங்காய அறுவடை காலங்களில் விலை வீழ்ச்சி,
விலை உயர்வின்போது, இக்கிடங்குகளில் பாதுகாப்பாக சேமித்து வைத்து,
விற்பனைக்கு எடுத்து செல்லலாம். விலை வீழ்ச்சியின்போது, பெரும்
இழப்புகளை தவிர்க்கவும், இக்கிடங்குகள் உதவும், என தோட்டக்கலை
துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.