ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
ஈரோடு:ஈரோடு குமலன் குட்டையில், பி அண்ட் சி ப்ராஜெக்ட் என்ற கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. இதன் நிறுவனர்
குமலன் குட்டையில், பி அண்ட் சி ப்ராஜெக்ட் என்ற கட்டுமான நிறுவனம்
செயல்படுகிறது. இதன் நிறுவனர் பெரியசாமி. இறந்து விட்டார். மகன்
சின்னசாமி நடத்தி வருகிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. மத்திய, மாநில அரசு மற்றும் பொது
துறை நிறுவன கட்டுமானங்களை டெண்டர் எடுத்து பணி செய்கின்றனர்.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம், இந்நிறுவனத்தால்
மேற்கொள்ளப்பட்டது.ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சாந்தி
தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார், நேற்று காலை, 11:30
மணியளவில் நிறுவனத்தில் சோதனையிட வந்தனர். டெண்டர் ஆவணங்கள், நிதி
பரிவர்த்தனை உள்ளிட்ட விபரங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர். கணினி,
ஹார்ட் டிஸ்க் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். ஈரோடு
பழையபாளையத்தில் உள்ள உரிமையாளர் சின்னசாமி வீட்டில்,
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.