Environment
மனிதர் – வனவிலங்குகள் மோதல் தடுக்க இளைஞர்கள் நடைபயணம்
அவிநாசி, செப். 7– நீலகிரி மாவட்டத்தில் மனிதர் -– வனவிலங்கு மோதலை நிரந்தரமாக தடுக்க வேண்டும்; புலிகள் காப்பக
நீலகிரி மாவட்டத்தில் மனிதர் -– வனவிலங்கு மோதலை நிரந்தரமாக தடுக்க வேண்டும்; புலிகள் காப்பக பகுதிகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கூடலுாரில் இருந்து சென்னை வரை இரு பட்டதாரி இளைஞர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
கூடலுார் அருகே தேவர்சோலை பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி ஷியோன், 28, மற்றும் ஐ.டி., பொறியியல் பட்டதாரி சிவபிரகாஷ், 27, ஆகியோர் கடந்த ஆக., 3ம் தேதி நடைபயணத்தை துவக்கினர். 600 கி.மீ., பயணத்தின் ஏழாவது நாளாக நேற்று அவிநாசி வந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மனிதர் - வனவிலங்கு மோதல் அதிகரித்துள்ளது. மசினகுடி, முதுமலை, பொக்காபுரம், தொரப்பள்ளி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை நடமாட்டத்தால் கூலித்தொழிலாளர்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
சமீப காலமாக பகல் நேரங்களிலேயே புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரு வாரங்களுக்கு முன் புலி தாக்கி இரு கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் கிடைப்பதில்லை.
வனப்பகுதிகளில் ரிசார்ட், காட்டேஜ்கள் அதிகரிப்பதால் விலங்குகள் வெளியேறுகின்றன. புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படுவதற்கு முன் முதுமலை, மசினகுடி, பொக்காபுரம், தொரப்பள்ளி பகுதிகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யாமல், மக்களின் குடியிருப்பு உரிமையை நிரந்தரமாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வரை சந்திக்க சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளோம்.
நடைபயணம் மேற்கொண்டுள்ள ஷியோன், சிவபிரகாஷ்.