மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

துாத்துக்குடி: மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கேரளாவை சேர்ந்த கட்டட தொழிலாளி சுனில், என்பவரை, 51, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம், கோட்டையத்தை சேர்ந்த சுனில், நண்பர்களுடன் துாத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த, 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண் ஒருவரை, நேற்று அதிகாலை ஏமாற்றி, மறைவிடத்திற்கு அழைத்து சென்று, சுனில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பெண்ணின் தாய், தன் மகளை காணாததால் தேடியபோது, அவருக்கு, மகள் பலாத்காரம் செய்யப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது. போலீசார் சுனிலை பலாத்கார வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.