Politics
ராமேஸ்வரத்தில் ஜீவன் ரெசிடென்சி திறப்பு விழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தெற்கு ரதவீதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஜீவன் ரெசிடென்சி தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.
மதுரை மாவட்ட சி.எம்.எஸ்., பொதுமேலாளர் முருகேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விடுதி உரிமையாளர், ராம்கோ கூட்டுறவு மேலாளருமான ஜீவா கருப்புசாமி, அவரது மனைவி ரம்யா அனைவரையும் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், ராமேஸ்வரம் போலீஸ் டி.எஸ்.பி., திருப்பதி, நகராட்சி துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் சேர்மன் அர்ச்சுனன், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், அ.தி.மு.க., நகரச்செயலாளர் அர்ச்சுனன், அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர் தங்கராஜ், ஜோதிலிங்க நிதி நிறுவன உரிமையாளர் பாலமுருகன், முன்னாள் துணை சேர்மன் குணசேகரன், அ.ம.மு.க.,செயலாளர் சுதாகர், த.வே.க., நகர் செயலாளர் கோவிந்தன், நகராட்சி கவுன்சிலர்கள் சண்முகவேல், சத்தியமூர்த்தி, முகேஷ், ராஜீவ்காந்தி, திசைவீரபாண்டி பங்கேற்றனர்.----