Politics
மழையில் பிறந்து, புயல்களை வென்றவர்கள் நாங்கள்: சொல்கிறார் ஸ்டாலின்

சென்னை: மழையில் பிறந்து, புயல்களை வென்றவர்கள் நாங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக 78ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திமுகவின் பயணம் 78ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
அண்ணாதுரை விதைத்து, கருணாநிதி வளர்த்து, நாம் காத்து நிற்கும் தமிழகத்தின் தனித்துவத்தையும், வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்; மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி, சுயமரியாதை தமிழகத்தின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்; பயணத்தில் வெல்வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.