Politics
குவைத்தில் சிக்கிய தமிழ்நாட்டு பெண் மீட்பு! – வெளியுறவுத் துறை எடுத்த நடவடிக்கை
குவைத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி வனிதா மீட்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வனிதா(35), எனும் பெண் குவைத்தில் வீட்டு வேலைக்காகச் சென்றார். அங்கு அவர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்து, தன்னை காப்பாற்றுமாறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து வனிதாவின் தாய் வெண்ணிலா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் கொடுத்தார். மேலும், “என் மகளை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
#WATCH | Delhi: On Tamil Nadu woman named Vanitha was rescued after a desperate SOS from Kuwait, MEA Official Spokesperson Randhir Jaiswal says, "...when our embassy came to know of this particular issue, they gave her a helping hand and as of now you would have seen some of… pic.twitter.com/3yL0GdDlh5
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரந்தீர் ஜெயஸ்வால், “தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா குறித்தான தகவல் தூதரகம் அறிந்ததும், அவரை மீட்க தேவையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு, அவர் மீட்கப்பட்டுள்ளார். வனிதா தற்போது குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருக்கிறார். வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக எங்களால் முடிந்த சிறந்ததைச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
எடை குறைக்க ஜிம் போக தேவையில்லை... தினமும் 20 நிமிஷம், வீட்டிலேயே இந்த 5 பயிற்சிகள் செய்யுங்க!
இந்தப் பயிற்சிகளை செய்ய எந்தவித உபகரணமும் தேவையில்லை.
தினமும் 20 நிமிடம் என ஒதுக்கி, காலை நேரத்தில் இவற்றை செய்து வாருங்கள்.
இதன்மூலம் எடை இழப்பு, தொப்பை குறைப்பை எளிதாக சாத்தியப்படுத்தலாம்.
