Sport
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி கால்பந்தில் இரண்டாமிடம்
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியர், கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர்.
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி, கரூர் மாவட்ட
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்டத்திலிருந்து பல்வேறு
பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி
மாணவியர் அணி, முதல் போட்டியில் அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி
அணியுடன் விளையாடி, 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை டை பிரேக்கர் முறையில்,
4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இறுதி போட்டியில் ஈசநத்தம்
அரசு மேல்நிலைப்பள்ளி அணியிடம் தோற்று, இரண்டாம் இடம் பெற்றனர்.
மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றதால், 36 ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு
பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மேலும் இக்குழுவில் இடம்
பெற்றுள்ள ஐந்து மாணவியர், கரூர் மாவட்ட அணிக்காக தேர்வு பெற்று, மாநில
அளவிலான முதல்வர் கோப்பைப் போட்டியில் பங்கேற்றனர்.
அணியினரை பள்ளி தாளாளர் கஜ்னபர் அலி, பள்ளப்பட்டி எஜூகேஷன் சொசைட்டி
முதன்மை உதவி செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் உறுப்பினர்கள்,
தலைமையாசிரியர் தாஜுதீன், உதவி தலைமையாசிரியர்கள் ஹாரிஸ் அலி,
நாகூர் மீரான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.