டூவீலர் மீது பஸ் மோதி விபத்து கணவர் கண்முன் மனைவி பலி
ஆண்டிபட்டி, செப்.9- தேனி அல்லிநகரம் புத்தர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் 27, இவரது மனைவி சிவராமலட்சுமி 25, இவர்
தேனி அல்லிநகரம் புத்தர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் 27, இவரது மனைவி சிவராமலட்சுமி 25, இவர் ஆண்டிபட்டியில் தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பள்ளியில் பயிற்சி எடுப்பதற்கு கல்லூரியின் அனுமதி கடிதம் பெறுவதற்காக மனைவியுடன் தனது டூவீலரில் தேனியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி சதீஷ்குமார் சென்றார். சண்முகசுந்தரபுரம் துணை மின் நிலைய அலுவலகம் அருகே, பின்னால் சென்ற அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. விபத்தில் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்த சிவராமலட்சுமி மீது பஸ்சின் வலது முன் பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் இரு துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். கணவர் கண் முன்னே மனைவி துடிதுடித்து இறந்தார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.