Politics
அரசு பள்ளி ஆசிரியைகள் கவுரவிப்பு

கருமத்தம்பட்டி: வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கவுரவித்தனர்.
கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், ஆசிரியர் தின விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கணித ஆசிரியை சிவப்பிரியா, தமிழ் ஆசிரியை பேபி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பேரூராட்சி தலைவர் சசிக்குமார், பள்ளி மேலாண்மை உறுப்பினர் ரத்தினம், தலைமை ஆசிரியர் ( பொறுப்பு) முரளி, முன்னாள் மாணவர் சரவணன் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் பணிகளை பாராட்டி பேசினர்.