Education
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை.. காலாண்டுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு

தமிழ்நாடு 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு. செப். 16 முதல் 25 வரை தேர்வுகள் நடைபெறும்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 2026-2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. காலாண்டுத் தேர்வு 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா, தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா, தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் காலாண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதில், அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறுவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பாடத்திற்கு தேர்வினை நடத்த வேண்டும்.
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். மேலும் செப்டம்பர் 16 - தமிழ், செப். 17 - ஆங்கிலம், செப். 18 - விருப்பப்பாடம், செப். 21 - கணக்கு, செப். 22 - உடற்கல்வி, செப். 23 - அறிவியல், செப்.24 - சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடத்தப்படும்.
செப்.18 - இயற்பியல், பொருளியியல், வேலைவாய்ப்பு திறன்கள்
செப்.21 - கணக்கு, விலங்கியல், வணிகவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாயம், நர்சிங் (பொது)
செப்.22 - தொடர்பு ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், உயர் வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
செப்.23 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணுவியல், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை இயந்திர பொறியியல், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலக்கம்,
செப்.25 - வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல்
