மண்டல குழு தலைவர் மீண்டும் பொறுப்பேற்பு
செம்பாக்கம், செப். 18– தகுதி நீக்கம் செய்யப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலக்குழு தலைவரின், தகுதி
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலக்குழு தலைவரின், தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவர் நேற்று, மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், 40வது வார்டில், கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஜெயபிரதீப் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். பின், 3வது மண்டலக் குழு தலைவர் தேர்தலில் குலுக்கல் முறையில் வெற்றிப் பெற்று, தலைவராக தேர்வானார்.
அதன்பின், பல்வேறு காரணங்களால், அவரது மண்டலக்குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஜெயபிரதீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஜெயபிரதீப்பின் தகுதி நீக்கத்தை மறு ஆய்வு செய்யுமாறு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, அரசு, மறு ஆய்வு செய்து, தகுதி நீக்கத்தை ரத்து செய்தது. இதையடுத்து, அவர், நேற்று, மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், சட்டசபை தேர்தலுக்கு முன், த.வெ.க.,வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.