மஹாராஷ்டிராவில் துப்பாக்கிச்சூடு நடத்தி மிரட்டி சேலம் ஆடு வியாபாரிகளிடம் ரூ.20 லட்சம் கொள்ளை
சேலம்; ஹாராஷ்டிரா சென்ற சேலத்தை சேர்ந்த ஆடு வியாபாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மிரட்டி, 20 லட்சம் ரூபாய், 3 பவுன் நகைகள் கொள்ளைய-டிக்கப்பட்டதாக, அவர்களது குடும்பத்தினர், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்த கார்த்திக், 33, உள்பட, 10க்கும் மேற்பட்டோர், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேஷிடம், நேற்று அளித்த மனு:
என் தந்தை சேகர்,59; கடந்த, 40 ஆண்டாக, ஆடு-களை வாங்கி விற்று வருகிறார். ஆடு வாங்க, மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு என் தந்தை மற்றும் ரவிக்குமார், 55, செந்தில்குமார், 42, சிவக்-குமார், 45, சசி, 49, வெங்கடேசன், 30, உள்பட, 10 பேர், கடந்த செப்., 10ல்(நேற்று முன்தினம்) லாரியில் சென்றனர். மறுநாள் அதிகாலை, மஹாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டம் மாடிகால் எனும் சந்தைக்கு சென்றுகொண்டிருந்-தபோது, சாத்துாரில் லாரியை வழிமறித்த முக-மூடி கும்பலை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், துப்பாக்கிச்சூடு நடத்தி, கொன்று விடுவதாக மிரட்டினர். தொடர்ந்து அவர்கள் அனைவரிடமும் இருந்த, 20 லட்சம் ரூபாய், 3.4 பவுன் நகைகள், 5 மொபைல் போன்களை கொள்ளை அடித்தனர். மேலும் துப்பாக்கியால் தாக்கிவிட்டு, 'வெளியே சொன்னால் கொன்று விடுவோம்' என மிரட்டி தப்பியுள்ளனர்.தற்போது என் தந்தை உள்பட, 10 பேர், அங்கி-ருந்து திரும்ப கூட பணமின்றி தவித்து வருகின்-றனர். அதனால் போலீசார் விசாரித்து, தந்தை உள்பட, 10 பேரையும் மீட்டு சேலம் வர வழி செய்ய வேண்டும். மேலும் கொள்ளை அடித்தவர்-களை கண்டுபிடித்து, பணம், நகைகளை மீட்டுத்-தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.