Politics
சாய் இயற்கை,யோகா மருத்துவக் கல்லூரி துவக்கம்
கோவை: வீரப்பனூரில், சாய் இயற்கை மருத்துவம், யோகா மருத்துவ கல்லூரியின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில், சாய் கல்வி அறக்கட்டளை தலைவர் மனோகரன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக, மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஜூவல்ஓரம், வி.சி.க. தலைவர் திருமாவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு, முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பாஸ்வான் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர் ஜூவல் ஓரம் பேசுகையில், ‘‘நம் பாரம்பரிய மருத்துவ முறையின் ஆணிவேரான, இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்ற உன்னதக் கொள்கையை மெய்ப்பிக்கும் வகையில், இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சார்ந்த சிறப்பு சிகிச்சைகள் கற்பிக்கப்படும்,’’ என்றார்.
சாய் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லலிதா குமாரி, நைட்டிங்கேல் கல்விக் குழும கல்லூரி முதல்வர்களான மும்தாஜ், பொன்னம்மாள், அன்னம், ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.