Sport
3வது டி-20: ஆப்கானிஸ்தானுக்கு 222 ரன் இந்தியா இலக்கு

புதுடில்லி:இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிக்களுக்கிடையான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 221 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு 222 ரன் இலக்கு நிர்ணயித்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்டு டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான் 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி, டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று(செப்.,17)நடைபெறுகிறது. டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அபிஷே க் சர்மா சதம்; சஞ்சு சாம்சன் அரைசதம்:
அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின். துவக்க ஆட்டக்காரர்களான வீரர்களான அபிஷே க் சர்மா (108 ரன்) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். சஞ்சு சாம்சன் (50ரன்) அரைசதம் அடித்தார். அதை தொடர்ந்து வந்த திலக் வர்மா(2 ரன்) சோபிக்கவில்லை.ஷிவம் துபே 14 ரன்னிலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களிலும் இஷான் கிஷன் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதிஷ்குமார் ரெட்டி 1 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்ஷாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 222 ரன்னை இந்தியா இலக்கு நிர்ணயித்தது.