Politics
2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற மூன்று ஆண்டு செயல்திட்டம்: அமித் ஷா

2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற அமித் ஷா அறிவித்துள்ள மூன்று ஆண்டு செயல்திட்டம் குறித்து...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - எக்ஸ்
கோவா: 2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான மூன்று ஆண்டு செயல்திட்டத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, போதையற்ற இளைய சமுதாயம் மிகவும் அவசியமானது என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மூன்று நாள் பயணமாக கோவா வந்துள்ள அமித் ஷா, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில்,
2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான மூன்று ஆண்டு செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, போதையற்ற இளைய சமுதாயம் மிகவும் அவசியமானது என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு முதல் அமலாக்க நடவடிக்கைகள், உளவுத் தகவல் பகிர்வு, நிதிசார் விசாரணைகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை அரசு வலுப்படுத்தியுள்ளது.
2014 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் கோடி மதிப்பிலான 1.19 கோடி கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 48.66 லட்சம் கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உளவுத் தகவல் மற்றும் செயல்பாடுகள் சார்ந்த அமலாக்கம், முக்கிய மூலப்பொருள்கள் மற்றும் செயற்கை போதைப்பொருள்களின் மீதான கட்டுப்பாடு, தேவை மற்றும் பாதிப்பைக் குறைத்தல், திறன் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்தச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தல் விநியோகச் சங்கிலியை முறியடித்தல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தலைமறைவாக உள்ள 100 பேரை இந்தியாவுக்குக் கொண்டுவருதல் மற்றும் 100 ரகசிய போதைப்பொருள் ஆய்வகங்களை கண்டறிந்து அழிப்பது ஆகியவற்றை அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த இயக்கம் 50 கோடி குடிமக்களைச் சென்றடைவதுடன், ஒரு லட்சம் போதைப்பொருள் ஒழிப்புத் தன்னார்வலர்களை உருவாக்கப்படுவதுடன், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை 1,751-ஆக அதிகரிக்கப்படும்.
கோவாவில் போதைப்பொருள் தடுப்புப் பணிப்படை செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமித் ஷா, இந்த இயக்கத்திற்குப் பொதுமக்களும் ஊடகங்களும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேட்டுக்கொண்டாா்.
Union Home Minister Amit Shah today outlined a three-year roadmap to make India drug-free by 2029
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.