எல் நினோவால் உடலில் உப்பு சத்து குறையும்
தேனி:மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் தோல் எரிச்சல், தோல் பிரச்னை போன்ற நோய் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகின்றனர்.
இதுபற்றி மாவட்ட சுகாதார அலுவலர் வரதராஜன் கூறுகையில், ' மாவட்டத்தில் இவ்வாண்டு போதிய பருவமழை பெய்யவில்லை. எல் நினோவின் தாக்கம் தமிழகத்தில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் கோடை காலத்திற்கு நிகராக வெயில் வாட்டுகிறது. அதிகளவு வியர்வை உடலில் வெளியேறுவதால் தோல் பிரச்னை ஏற்படுகிறது. உடலில் உள்ள உப்பு அளவு குறைவதால் அதனை ஈடுகட்ட உப்பு கலந்த நீரை குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., கரைசல் குடிக்கலாம். காலை, மாலையில் குளிப்பதால் உடல் சூடு குறைந்து தோல் பிரச்னைகள் குறையும். எனவே குறைந்தது தினமும் ஒருவர் 3 லிட்டர் குடிநீர் குடிக்க வேண்டும் என்றார்.