Crime, law and justice
சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய், நகராட்சி, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது, மழைநீர் கால்வாய் அமைப்பது, மின் விளக்குகள் அமைப்பது, குடிநீர் பிரச்னை, அடிப்படை வசதிகள் குறித்தும், காவல், வருவாய் துறைககளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பான நேரங்களில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் எஸ்.பி., ஷஹ்னாஸ், டி.ஓர்.ஓ., ஜீவா உட்பட துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.