லஞ்ச புகாரில் சிக்கிய வனச்சரகர் திடீர் சாவு

திருப்பத்துார்: லஞ்ச புகாரில் சிக்கி, சஸ்பெண்ட் ஆன வனச்சரக அலுவலர் செங்குட்டுவன், 51, மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் பெத்துாரைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர், திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் நாடானுாரில் வனச்சரக அலுவலராக பணியாற்றினார்.
அரசுக்கு சொந்தமான வனப்பகுதி நிலத்தை, பட்டா செய்து தருவதாக கூறி, செங்குட்டுவன் உட்பட வனத்துறை அதிகாரிகள் ஆறு பேர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதால், கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதில், கடும் மன உளைச்சலில் இருந்த செங்குட்டுவன், நேற்று முன்தினம் மாலை, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.