காவலர் தின அஞ்சலி
கடலுார்: காவலர் தினத்தையொட்டி கடலுார் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள நினைவு துாணிற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காவலர் தினம் ஆண்டுதோறும் செப். 6 ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கடலுார் மாவட்ட எஸ்.பி,., அலுவலகத்தில் உள்ள நினைவுத்துாணிற்கு விவேகானந்த சுக்லா மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் எஸ்.பி., தலைமையில் போலீசார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இறுதியாக ஆயுதப்படை போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.