Weather
தமிழகத்தின் 5 இடங்களில் சதமடித்த வெயில்
சென்னை,உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந

உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது. மேலும், தஞ்சாவூர், மதுரை விமான நிலையம், மதுரை நகரம் மற்றும் கரூர் பரமத்தி ஆகிய இடங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.