ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புதிய மேலாண்மை குழு உறுப்பினர்களை
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புதிய மேலாண்மை குழு
உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பெற்றோர் விழிப்புணர்வு
கூட்டம் நடைபெற்றது.
கல்வி உரிமை சட்டப்படி அனைத்து பள்ளிகளிலும்
பெற்றோர்கள், இரண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள்,
முன்னாள் மாணவர்கள் என்ற, 24 பேரை கொண்ட பள்ளி மேலாண்மைக்குழு
அமைக்கப்பட்டது. இக்குழுவின் காலம் 2 ஆண்டுகளாகும். அது நடப்பு
கல்வியாண்டில் முடிவடைந்ததால், புதிய பள்ளி மேலாண்மைக்குழு
கூட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
நடைபெற்றது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி
வாழ்த்தி பேசினார். தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். பள்ளி வயது
குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், இடைநிற்றல் குழந்தைகளை
கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், பள்ளி வங்கி கணக்குகளை
பராமரிக்கும் முறை, ஒவ்வொரு உறுப்பினரும் எந்த முறையில்
தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை விளக்கிக் கூறினார்.
இக்குழுவிற்கான தேர்தல் வரும், 26ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மகிழ்முற்ற செயலர் ஷகிலா பானு நன்றி கூறினார்.