Economy, business and finance
நிறுவன செய்திகள்
பி.எம்.இ.ஜி., நிறுவனத்துக்கு இரு முக்கிய விருதுகள் விளம்பர துறையில் இயங்கி வரும் பி.எம்.இ.ஜி.,

பி.எம்.இ.ஜி., நிறுவனத்துக்கு இரு முக்கிய விருதுகள்
விளம்பர துறையில் இயங்கி வரும் பி.எம்.இ.ஜி., எனும் 'பாரத் மீடியா அண்டு என்டர்டெயின்மென்ட் குரூப்' நிறுவனம், 'ஆண்டின் சிறந்த முகமை' மற்றும் 'ஆண்டின் சிறந்த ஸ்டார்ட்அப்' ஆகிய இரு விருதுகளை பெற்றுள்ளது. புதுமையான அணுகுமுறை, தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்டவற்றில் நிறுவனம் காட்டிய வளர்ச்சியை அங்கீகரிக்கும் வகையில், 'இ 4 எம் இந்தியா மார்க்கெட்டிங் அவார்ட்ஸ் சவுத் 2026' நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கென்யாவில் டாடாவிற்கு சுரங்க அனுமதி ரத்து
கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, டாடா குழுமத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வழங்கியிருந்த சோடா ஆஷ் சுரங்க அனுமதியை ரத்து செய்துள்ளார். தான்சானியா எல்லை அருகே இந்த சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், டாடா குழுமம் நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் ஆலை எதையும் அமைக்கவில்லை என கூறி இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
என்.எம்.டி.சி.,யுடன் ஸ்டீல் எக்ஸ்சேஞ்ச் ஒப்பந்தம்
ஸ்டீல் எக்ஸ்சேஞ்ச் இந்தியா நிறுவனம், ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் என்.எம்.டி.சி., அமைக்க உள்ள புதிய ஆலையில் இருந்து இரும்புத்தாது பெறுவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன்படி, தனது ஸ்டீல் உற்பத்திக்கு தேவையான இரும்பு தாதுவை இந்நிறுவனம் பெற உள்ளது. உற்பத்தி நடவடிக்கைகளை சீராக மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும்.
சர்வதேச பணப்பரிமாற்றம் அறிமுகம் செய்தது ஜியோ
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பேமென்ட் சொல்யூஷன்ஸ், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான சர்வதேச பணப்பரிமாற்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான பேமென்ட் அக்ரிகேட்டராக செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியதை தொடர்ந்து இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் கூலர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சிம்பொனி நிறுவனம், இந்திய சந்தையில் ஏசிக்களுக்கான பிரிவில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதனுடன், பி.எல்.டி.சி., மின்விசிறிகள் மற்றும் ஏர் கிளீனர்கள் தயாரிப்பு பிரிவுகளிலும் இந்நிறுவனம் விரிவடைய உள்ளது. புதிய பிரிவுகளில் நுழைவதன் வாயிலாக, வர்த்தகத்தை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு: பி.எம்.இ.ஜி., எனும் 'பாரத் மீடியா அண்டு என்டர்டெயின்மென்ட் குரூப்' நிறுவனம், 'ஆண்டின் சிறந்த முகமை' மற்றும் 'ஆண்டின் சிறந்த ஸ்டார்ட்அப்' ஆகிய இரு விருதுகளை பெற்றுள்ளது.
புதுமை யான அணுகுமுறை, தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்டவற்றில் நிறுவனம் காட்டிய வளர்ச்சியை அ ங்கீகரிக்கும் வகையில், 'இ 4 எம் இந்தியா மார்க்கெட்டிங் அவார்ட்ஸ் சவுத் 2026' நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.