ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
ஈரோடு:வேலுார் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், 260 பேர், 40 ஆசிரியைகள், கேரளாவிற்கு சில
மாவட்டம் காட்பாடியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், 260 பேர்,
40 ஆசிரியைகள், கேரளாவிற்கு சில தினங்களுக்கு முன் கல்வி சுற்றுலா
சென்றனர்.
சுற்றுலா முடிந்து கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும்
ஓணம் சிறப்பு ரயிலில் கடந்த, 29ல் பயணித்தனர். 29ம் தேதி அதிகாலை ரயில்,
ஈரோடு தொட்டிபாளையம் ஸ்டேஷனில் சிக்னலுக்காக காத்திருந்தது.
துாங்கி கொண்டிருந்த, 35 வயது மதிக்கதக்க பெண் ஆசிரியை
அணிந்திருந்த ஆறு பவுன் தங்கச்சங்கிலியை, மர்ம நபர் பறித்து
இருட்டில் தப்பி சென்றார். ஆசிரியை புகாரின்படி திருப்பூர் ரயில்வே
போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.