Economy, business and finance
வங்கி தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டமும், வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்தையன் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் போராட்டதை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகவும், அனைத்து சனிக் கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கைகயை இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டது.
ஆனால், இதை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்யும் மத்திய அரசின் செயலை கண்டிப்பது. வங்கி ஊழியர்களுக்கான செயல்திறன் ஊக்கத் தொகை திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூட்டுறவு துறையில் உள்ள காலி பணியிடங்களை ஐ.பி.பி.எஸ்., மூலம் நிரப்ப வேண்டும். கூட்டுறவு துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பண பரிவர்த்தனை உட்பட வங்கி சார்ந்த சேவைகள் முடங்கியது.