Lifestyle and human interest
வெளிச்சமில்லா வீதி: இருளில் மக்கள் பீதி
வால்பாறை: வால்பாறை நகரை ஒட்டியுள்ள அண்ணாநகரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் மற்றும் உயர்மின்கோபுர விளக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சி சார்பில் வார்டில் எந்த ஒரு பணியும் நடப்பதில்லை. சிறுத்தை நடமாட்டம் மிகுந்த அண்ணாநகரில் தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. சிறுத்தைக்கு பயந்து மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் அண்ணாநகர் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.