னியாக வசித்த முதியவர் மர்ம மரணம்: டி.ஐ.ஜி. - எஸ்.பி., விசாரணை
வெள்ளகோவில்; வெள்ளகோவிலில் வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, கோவை சரக டி.ஐ.ஜி., மற்றும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆகியோர் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்துார் ரோட்டை சேர்ந்தவர் ராஜன், 63. திருமணமாகாத இவர், ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். வீட்டில் தனியாக வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், ராஜன் துாங்கச் சென்றார். இரவு உணவை வீட்டுக்கு வெளியே அவரது உறவினர்கள் வைத்துச் சென்-றுள்ளனர். நேற்று காலை வரை உணவு எடுக்கப்-படாமல் இருந்ததால், சந்தேகமடைந்து வீட்-டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, ராஜன் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்-தினர். வீட்டில் இருந்த கைரேகை உள்ளிட்ட தட-யங்கள் சேகரிக்கப்பட்டன. அவரது உடல் மீட்கப்-பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராஜனின் உடலில் சில இடங்களில் நகக்கீறல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ஆடைகள் கலைக்கப்பட்டு கிடந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு-களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்-றனர்.
ராஜனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவி-னர்கள் அளித்த புகாரின் பேரில், வெள்ளகோவில் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்ப-திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ராஜன் இறந்து கிடந்த வீட்டில், கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன் மற்-றும்எஸ்.பி., சிருஷ்டி சிங் உள்ளிட்டோர் பார்-வையிட்டு விசாரணை நடத்தினர்.