Sport
ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மா முன்னேற்றம்!

ஐசிசி டி20 போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
நடப்பு ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம், ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, தவரிசையில் 8-வது இடத்திலிருந்த அவர் தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி முதல் இடத்தில் தொடர்கிறார். சோஃபி எக்கல்ஸ்டோன், சார்லி டீன், நான்குலேகோ மிலாபா மற்றும் லாரன் பெல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Indian player Deepti Sharma has moved up in the ICC T20 rankings for bowlers.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.