35 ஆண்டு கால கோரிக்கை புதிய மின்மாற்றி திறப்பு
திருப்போரூர், செப். 11– சிறுதாவூர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி நேற்று முதல் மக்கள்
சிறுதாவூர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் ஊராட்சியில், அம்பேத்கர் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு, மின்பற்றாக்குறையால் வீடுகளில் மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல், மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே, புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என 35 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதைதொடர்ந்து, சிறுதாவூர் ஊராட்சி தலைவர் அருள், மின்வாரியத்தில் மின்மாற்றி அமை க்க கோரி மனு அளித்தார்.
அதன்படி, மின்வாரிய துறை சார்பில் 7.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அம்பேத்கர் நகரில் புதிதாக மின்மாற்றி
அமைக்கப்பட்டது.