Arts, culture, entertainment and media
ஆலங்குடி அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விபத்தில் காயமடைந்த கோழிப்பண்ணை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழ வேப்பங்குடியைச் சோ்ந்தவா் கருப்பையா (51). கோழிப் பண்ணை உரிமையாளரான இவா், 2 நாள்களுக்கு முன் மோட்டாா் சைக்கிளில் அறந்தாங்கி சென்றுவிட்டு ஊா் திரும்பியபோது, வள்ளிக்காடு அருகே எதிா்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.