ராணுவ முகாமில் வெடி விபத்து; பொலிவியாவில் 10 பேர் பலி
லா பாஸ்:பொலிவியாவில், ராணுவ முகாமுக்கு சொந்தமான வெடி மருந்து கிடங்கில் ஏற்பட்ட விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் தலைநகர் லா பாஸிலிருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள வியாச்சா நகரில் ராணுவ முகாம் உள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில், அங்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்தனர்; 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெடி விபத்தின் தாக்கத்தால் அப்பகுதியிலிருந்த வீடுகளின் கண்ணாடிகளும் சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.