Politics
மாநகர் மாவட்ட காங்., இயக்க மறுசீரமைப்பு திட்ட கூட்டம்
ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்., இயக்க மறுசீரமைப்பு திட்ட கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமை வகித்தார். மேற்கு மண்டல
பொறுப்பாளர் மற்றும் காங்., கமிட்டி பொதுச் செயலாளர் தணிகா
தமிழ்செல்வன் ஆகியோர் பேசினர். வரும், 2029ல், எம்.பி., ராகுல்காந்தியை
பிரதமராக்குவது, அதற்காக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிகளை
அமைத்து கட்சியை வலுப்படுத்துவது. மக்களை சந்தித்து,
பிரச்னைகளுக்காக போராடுவது போன்றவைகளில் ஈடுபடுவது என முடிவு
செய்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஈ.ஆர்.ராஜேந்திரன், ஈ.பி.ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.