இருள் சூழ்ந்த அன்னஞ்சி விலக்கு பஸ் நிறுத்தம்
தேனி: தேனி அன்னஞ்சி விலக்கு பஸ் ஸ்டாப் பகுதியில் போதிய விளக்கு இன்றி இருள் சூழ்ந்துள்ளதால் பெண் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது.
தேனியில் இருந்து திண்டுக்கல், திருச்சி, கோவை, திருப்பூர், பெரியகுளம் செல்லும் பஸ்கள் அனைத்தும் அன்னஞ்சி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நின்று செல்கின்றன. இதனால் தேனி நகர்பகுதியில் இருந்து ஏராளமானோர் அன்னஞ்சி விலக்கு பஸ் ஸ்டாப்பை பயன்படுத்து கின்றனர்.
இது தவிர பெரியகுளம் பகுதியில் இருந்து நகர்பகுதிக்கு வேலைக்கு வருவோரும் இந்த பஸ் ஸ்டாப்பை அதிகம் பயன்படுத்துகின்றனர். மாலை, இரவில் பணிமுடிந்து வீடு திரும்பும் பெண்கள் பஸ்சிற்காக இங்கு காத்திருக்கின்றனர்.
இரவில் போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்துள்ளது. மேலும் குடிமகன்கள் அட்டகாசத்தால் பெண் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.
மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர மாநில நெடுஞ்சாலைத்துறையினரும், சுகாதார வளாகம் அமைக்க ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.