பாலுாட்டும் அறை மூடல் தாய்மார்கள் தவிப்பு
நாமக்கல்:சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து நாமக்கல், துறையூர், சேந்தமங்கலம்,
தாலுகா, எருமப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து நாமக்கல், துறையூர்,
சேந்தமங்கலம், மோகனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மப்சல்
மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அங்கு எப்போதும்
பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். கடைகளும் முறையாக ஏலம்
விடப்பட்டு செல்பட்டு வருகின்றன.
அறை மற்றும் தாய்மார்கள் பாலுாட்டும் அறைகள் உள்ளன. இதில் கத்திருப்பு
அறையில் இருந்த இருக்கைகள் உடைந்து காணப்படுவதால், பயணிகள்
பயண்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதேபோல், தாய்மார்கள்
பாலுாட்டும் அறை மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில்
இருந்து பச்சிளம் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு
பாலுாட்ட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரத்தில் சிலர் திறந்து சமூக விரோத செயலில் ஈடுபடுவதாக
கூறப்படுகிறது. எனவே, தாய்மார்கள் பாலுாட்டும் அறையை முறையாக
பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, பயணிகள்
எதிர்பார்க்கின்றனர்.