டூவீலர்கள் மோதி விபத்து அக்கா, தம்பி படுகாயம்
குமாரபாளையம்:குமாரபாளையம், சுந்தரம் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷினி, 19, ஹரீஷ், 14. இதில், வர்ஷினி ஈரோடு தனியார்
சுந்தரம் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷினி, 19, ஹரீஷ், 14. இதில்,
வர்ஷினி ஈரோடு தனியார் கல்லுாரியில் பார்மசி, இரண்டாம் ஆண்டும், ஹரீஷ்,
குமாரபாளையம் தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பும் படித்து
வருகின்றனர். நேற்று முன்தினம், ஸ்ரீவர்ஷினி, 'ஹோண்டா ஆக்டிவா'
டூவீலரில், ஹரீஷூடன், ஆனங்கூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
'யமஹா' டூவீலரை ஓட்டி வந்தவர், இவர்களது டூவீலர் மீது மோதிவிட்டு
நிற்காமல் சென்றுவிட்டார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.