Politics
தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்... போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி!

தனுஷ்கோடியில் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலால் வாகனங்களை விட்டுவிட்டு அரிச்சல்முனைக்கு நடந்து சென்றனர்.
தொடர் விடுமுறை ஒட்டி தனுஷ்கோடி நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பாதியிலேயே வாகனத்தை விட்டுவிட்டு நடந்து சென்று அரிச்சல்முனை யில் கடலில் அழகை சுற்றுலா பணிகள் ரசித்து வருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை ஒட்டி ராமேஸ்வரத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள சுற்றுலா தளங்களை பார்த்துவிட்டு பின்னர் தனுஷ்கோடி சென்று அரிச்சல்முனை கடலின் ரசிக்க செல்கின்றனர்.
தனுஷ்கோடியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் அதிகளவு ஆங்காங்கே அணிவகுத்து நிற்பதால் அரிச்சல்முனை பகுதிக்கு செல்ல முடியாமல் வாகனங்களை பாதியிலேயே விட்டுவிட்டு சுற்றுலா பயணி இறங்கி நடந்து செல்கின்றனர்.
தனுஷ்கோடி செல்லும் சுற்றுலா பயணிகள் கடலின் அழகை ரசிப்பதுடன் கடலில் குளித்து மகிழ்வதுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்துவிட்டு பழைய தேவாலயம், லைட் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று சுற்றி பார்த்து வருகின்றனர்.
