அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
கரூர்:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவ ட்ட, 15 வது பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், அரசு

ஊழியர் சங்க கரூர் மாவ ட்ட, 15 வது பேரவை கூட்டம், மாவட்ட தலைவர்
அன்பழகன் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.
உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்;
இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை, 56 மற்றும் 15ஐ ரத்து
செய்ய வேண்டும்; தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க
வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; கரூர் மாவட்டத்தில்
விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்; தொகுப்பூதியத்தில் பணி நியமனத்தை
கைவிட வேண்டும்; மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும்
என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பேரவை கூட்டத்தில், மாநில துணை தலைவர் செல்வராணி, மாவட்ட துணை தலைவர் கிருஷ்ண
மூர்த்தி, செயலாளர் பொன் ஜெயராம், இணை செயலாளர் இளங்கோ, பொருளாளர் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.