பனமரத்துப்பட்டி ஏரி பிரச்னை அத்திப்பட்டியில் அரளி பயிரிடும் விவசாயிகள் வெளியேற்ற மற்றொரு தரப்பினர் வலியுறுத்தல்
பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழையின்றி வறண்டபோது, ஏரியில் கிணறு தோண்டி வயல் அமைத்து, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்தனர். அந்த ஏரி நிலத்தடி நீரை நம்பியுள்ள கிராமங்-களில், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் சரிந்தது. அதனால் ஏரியில் உள்ள மக்களை வெளியேற்றி, மழைநீரை தேக்கி வைக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், விவசாயிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி, 2004ல் ஏரிக்குள் இருந்த விவசாயிகள் வெளியேற்றப்பட்டு, ஆக்கிரமிப்-புகள் அகற்றப்பட்டன.
அதில் அத்திப்பட்டியில், 1,400 ஏக்கர் நிலத்தை திரும்ப கேட்டு, ஒரு தரப்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்-போது அத்திப்பட்டியில், 20 ஆண்டுக்கு முன், ஏற்கனவே விவ-சாயம் செய்த பகுதியை சுத்தப்படுத்தி, அரளி செடி நடவு செய்-துள்ளனர். பாதை, கோவில் உள்ளிட்டவற்றை சீரமைத்து, கூடா-ரமும் அமைத்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி புகார்படி, அத்திப்பட்டி விவசாயிகள் மீது இரு பிரிவுகளில் வழக்கு போடப்-பட்டுள்ளது. இந்நிலையில் அத்திப்பட்டி விவசாயிகள், ஏரிக்குள் சென்று மீண்டும் விவசாயம் செய்ய, காளியாகோவில்புதுார், அடிக்கரை, பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி என, ஏரிகளை சுற்றியுள்ள மற்ற விவசாயிகள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள், மேட்டூர் அணை உபரி நீரை, பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்ப வேண்டும். அத்துடன் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனால் மாவட்ட
நடவடிக்கை எடுக்க வேண்டும்.