Lifestyle and human interest
சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டி சித்தாமூரில் விபத்து அபாயம்
சித்தாமூர், செப். 8– சித்தாமூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டமேல்நிலை நீர்த்தேக் தொட்டி

சித்தாமூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டமேல்நிலை நீர்த்தேக் தொட்டி சேதமடைந்து, விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
சித்தாமூர் ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சித்தாமூர் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.
மின்மோட்டார் மூலம் நீரேற்றப்பட்டு, இந்த குடிநீர் தொட்டியில் இருந்து குழாய்கள் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, சிதிலமடைந்துள்ளது.
மேலும், தொட்டியின் மேல்தளம் இடிந்து, அதன் இரும்புத் துகள்கள் கலந்த தண்ணீர் வினியோகிப்பதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இடியும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டிஅருகே குடியிருப்புகளும், ஊராட்சி அலுவலகமும் அமைந்துள்ளது.
எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், ஊரக வளர்ச்சித்துறையினர் ஆய்வு செய்து சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.