மகளிர் கூடைப்பந்து போட்டி
மதுரை, செப். 18 – மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி விருதுநகர்
மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி விருதுநகர் இந்துநாடார் செந்திக்குமார நாடார் (வி.எச்.என்.எஸ்.என்.,) கல்லுாரியில் நடந்தது.
முதல் அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 55 – 9 புள்ளிகளில் விருதுநகர் வி.வி.வி., கல்லுாரியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரி 63 – 28 என்ற புள்ளிகளில் பாத்திமா கல்லுாரியை வீழ்த்தியது.
மூன்றாமிடத்திற்கான போட்டியில் பாத்திமா கல்லுாரி 50 – 42 புள்ளிகளில் வி.வி.வி., கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 59 – 55 என்ற புள்ளிகளில் வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா பாராட்டினர்.