Crime, law and justice
விநாயகர் சிலை கரைப்பு விவகாரத்தில் மோ*தல் : ஒருவர் உயிரி*ழப்பு!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலிலும், நீர்நிலைகளிலும் இன்று கரைக்கப்பட்டன. இதற்காக முக்கிய இடங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதோடு விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கும், பாதுகாப்பாகக் கரைப்பதற்கும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் அவசர உதவிகளுக்காகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், கடலோரக் காவல்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். சிலைகளைக் கரைக்கும் இடங்களில் கிரேன் வசதிகளும், கடலுக்குள் சென்று சிலைகளைக் கரைக்கப் படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கீழ் கவரப்பட்டு மற்றும் மேல் கவரப்பட்டு கிராம இளைஞர்கள் விநாயகர் சிலையைக் கரைப்பதற்காக வந்திருந்தனர்.
அப்போது விநாயகர் சிலையைக் கரைப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், கீழ் கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் பரிதாமபாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இரு கிராமங்களிலும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அப்பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)