கதவால் பெண்ணுக்கு காயம் பஸ் டிரைவரிடம் விசாரணை
கோவை: இரு நாட்களுக்கு முன்பு, உக்கடம்–சோமனுாருக்கு 30எச் வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் திருச்சி ரோடு, இருகூர் பிரிவு ஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றியது. அப்போது, வயதான பெண்மணி ஒருவர் ஏறுவதற்கு முன்பே தானியங்கி கதவு மூடப்பட்டபோது பெண்ணின் மூக்கு, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. டிரைவர், கண்டக்டரிடம் பயணிகள் வாக்குவதம் செய்தனர். இதுகுறித்த வீடியோவும் வைரலாகியது.
அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘சம்பவம் குறித்து டிப்போ மேலாளர் விசாரணை நடத்திவருகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.