Politics
கோவில் உண்டியல் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கோவில் உண்டியலை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமாந்துாரை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் செல்வராஜ்,40; இவர், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து விளாந்தாங்கல் ஏரிக்கரை பகுதியில் சின்னம்மாள் என்ற கோவிலை கட்டி வழிபாடு செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி பூஜைகள் முடிந்ததும் இரவு கோவிலை பூட்டி விட்டு செல்வராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து, 5ம் தேதி காலை கோவிலுக்கு வந்த போது ஊஞ்சலில் இருந்த சில்வர் குட உண்டியல் இல்லாததால் அதிர்ச்சியடைந்து தேடினார். அதில், மற்றொரு கதவின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் உண்டியலை திருடி சென்றது தெரிந்தது. திருடு போன உண்டியலில் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணம் இருந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.